TNAயின் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதீயரசர் விக்னேஸ்வரனா? ஆளும் தரப்பு பீதியில்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற
நீதீயரசர் விக்னேஸ்வரன் வருவதனை ஆளும் தரப்பினர் விரும்பவில்லை என மகிந்த
சகோதரர்களுக்கு நெருக்கமான தரப்பில் இருந்து தெரியவருகிறது. நாடாளுமன்ற
உறுப்பினர் மாவை சேனாதிராஜாவோ அல்லது வேறு ஒரு கூட்டமைப்பின் பிரதிநிதி
முதலமைச்சர் வேட்பாளராவது அலட்டிக் கொள்ளத் தேவையில்லை எனக் கூறும ஆளம்;
தரப்பினர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் வேட்பாளராவதனை விரும்பவில்லை
எனக் கூறப்படுகிறது.
இலங்கையின் நீதிக் கட்மைப்பின் உயர் குழாமான உச்ச நீதிமன்ற
நீதியரசர்களில் ஒருவராக இருந்த விக்னேஸ்வரன் சலுகைகளுக்காக வளைந்து
கொடுக்காதவர் என்பதும் தனது நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும்
பின்வாங்குவது இல்லை எனவும் இவரது ஆளுமையை கையாள்வது கடினமான விடயம் எனவும்
ஆளும் தரப்பு கருதுவதோடு இவர்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவது
கடினமாக இருக்கும் எனவும் ஆளும் தரப்பு சிந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக