சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

15 ஜூலை, 2013

இலங்கையில் ஒவ்வொரு 90 நிமிடத்திற்கு ஒரு முறை பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படுகிறனர்



இலங்கையில் ஒவ்வொரு 90 நிமிடத்திற்கு ஒரு முறை பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாகவும் இந்த அனைத்து குற்றச் செயல்களின் பின்னணியில், அரசியல்வாதிகள் இருப்பதாகவும் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு கொழும்பில் நேற்று ஒழுங்கு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் இணை தலைவர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இதனை கூறியுள்ளார். நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள், கொலை, ஊழல், மோசடிகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. பெண்கள் மற்றும் சிறார்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்.
காவத்தையில் நடைபெற்ற கொலைகள் முதல், ஆசிரியை முழங்காலில் வைக்கப்பட்ட சம்பவம் வரை அனைத்து சம்பவங்களின் பின்னணியிலும் அரசியல்வாதிகள்  சம்பந்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் வீட்டு வன்முறைகளை எடுத்து கொண்டால், 2011 ஆம் ஆண்டை விட தற்போது மிக வேகமாக அதிகரித்துள்ளது.2011 ஆம் ஆண்டு 60 வீதமாக இருந்த பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள், 2013 ஆம் ஆண்டு 80 வீதமாக அதித்துள்ளது.
உலகில் பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் நடைபெறும் நாடுகளில் இலங்கை 05வது இடத்தில் உள்ளது. நாட்டில் ஒவ்வொரு 90 நிமிடத்திற்கு ஒரு முறை ஏதோ ஒரு வகையில் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார். பொது போக்குவரத்து சாதனங்களில் செல்லும் பெண்களில் 95 வீதமான பெண்கள் பாலியல் தொல்லைகளை அனுபவிக்கின்றனர் என போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக