சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

12 ஜூலை, 2013

விமல் வீரவன்ச குத்துக்கரணம்

vimal-veera1

வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால், தான் அமைச்சர் பதவியை விட்டு விலகுவேன் என்று கூறவில்லை என சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச குத்துக்கரணம் அடித்துள்ளார். 
வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினால், தான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கமாட்டேன் என்றும், பதவி விலகி விடுவேன் என்றும் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஐதேக உறுப்பினர் சஜித் பிறேமதாச கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் விமல் வீரவன்ச,
“வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் பதவி விலகுவதாக நான் கூறவில்லை.
வடக்கில் தேர்தலை நடத்த முன்னர், 13 வது திருத்தச்சட்டத்தில் உள்ள பிரிவினைவாதத்திற்கு வழி வகுக்கும் பிரிவுகளை நீக்குமாறே கோரியிருந்தேன்.
அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதனை துரிதமாக மேற்கொள்வதற்காக தெரிவுக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக