நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களையும் கண்காணிப்பதற்கு ஐ. நா
கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக
தேசியக் கூட்மைப்பின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் தற்போது நிர்வாகத்திலுள்ள அரசாங்கம்
மக்களின் வாக்குகளை எவ்வாறேனும் கொள்ளையடிக்க முயற்சிக்கும். எனவே,
மக்களின் வாக்குரிமையைப பாதுகாக்க வேண்டுமாயின் கண்காணிப்பாளர்கள் அவசியம்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, வாக்கு எண்ணும்
நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, வாக்களிப்பு நிலையங்களில்
கடமையாற்றிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளைப் பலாத்காரமாக வெளியேற்றியமை
போன்ற கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபட்டிருந்தது.
இந்த நிலையே செப்டம்பரில் நடைபெறவுள்ள மூன்று மாகாண
சபைத் தேர்தல்களிலும் தொடரும். ஆகவே, இவ்வாறான மோசடிகளைத் தடுக்கும்
வகையில் ஐ. நாவின் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என அவர்
தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக