சுவிட்சர்லாந்தின்
சூரிச் ரயில் நிலையம் அருகில் உள்நாட்டு பயணிகள் ரயிலும், பொருட்களை
ஏற்றிச் செல்லும் கிரேன் வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் பெரும் சேதம்
ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் அதிஷ்டவசமாக ஒருவர் மட்டும் கையில் சிறிய
காயத்துடன் உயிர்தப்பியுள்ளார். ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும்
எந்த வித காயமுமின்றி பாதுகாப்புடன் மீட்கப்பட்டுள்ளனர். சூரிச் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயிலானது சூரிச் ஓர்லிகான்(Zürich Oerlikon station) நிலையத்தை வந்தடைய வெகுநேரம் ஆகும். ஆனால் ரயில் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே சூரிச் ஓர்லிகான்(Zürich Oerlikon station) நிலையத்திற்கு அருகில் கிரேன் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்திற்கான வாய்ப்பு இல்லாத நிலையில் இந்த விபத்து எவ்வாறு நடைபெற்றது என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் பயணம் செய்த 250 பயணிகளும் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து நடைபெற்றது சூரிச் ஓர்லிகான் நிலையத்திற்கு(Zürich Oerlikon station) அருகில் என்பதால் பயணிகள் அனைவரும் நடந்தே ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டனர். இந்த விபத்தில் பணியாளர் ஒருவருக்கு மட்டும் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தால் சுவிஸ் அரசாங்கத்திற்கு ஆயிரத்திற்கும் அதிகமான சுவிஸ் பிராங்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. |
சிந்தனைத்துளிகள்....
எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !
“ஜென்னி மார்க்ஸ்”
15 ஜூலை, 2013
சூரிச்சில் ரயிலும் கிரேன் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து
(செய்தி-யாழ்தீபன்) புலம்பெயர் தமிழர்களை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக