சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

11 ஜூலை, 2013

கொழும்பில் தாதி குளித்ததை படம் பிடித்தவர் மாட்டிய மர்மம்



கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியொருவரை தனது கையடக்கதொலைபேசியின் ஊடாக படம்பிடித்த அந்த வைத்தியசாலையின் சுகாதாரபிரிவு உதவியாளரை எதிர்வரும் 24 ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வைத்தியசாலையிலுள்ள தாதி ஓய்வறையில் குறித்த தாதி குளித்துக்கொண்டிருந்தபோது அறையிலுள்ள உயரமான யன்னல் ஓட்டையில் தனது கையடக்க தொலைப்பேசியை பயன்படுத்தி படம்பிடித்த சுகாதாரபிரிவு உதவியாளரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை, மாளிகாகந்த மேலதிக நீதவான் ரஷந்த கொடவெல முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பொலநறுவையைச்சேர்ந்த ஜோசப் யூப் ரொசான் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரவு கடமையிலிருந்த தாதி கடமைகளை முடித்துக்கொண்டு இரவு 9 மணியளவில் தாதி ஓய்வறையில் குளித்துக்கொண்டிருந்துள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்தஅறையிலுள்ள உயரமான யன்னலின் ஊடாக கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி யாரோ தான் குளித்துக்கொண்டிருப்பதனை படம் பிடிப்பதை அல்லது வீடியோ ஒளிப்பதிவு செய்வதனை அவதானித்துள்ளார்.
கூச்சல் குழப்பமிடாத தாதி, திடீரென பாய்ந்து கையடக்க தொலைபேசியையை அபகரித்துவிட்டார்.
இதனையடுத்து அதுதொடர்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் குறித்த கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி நபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போதே சந்தேகநபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக