சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

19 ஜூலை, 2013

இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நான்கு சந்தேக நபர்கள் கைது


சிலாபம் - கொஸ்வத்தை பகுதியில் இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக்  கூறப்படும் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

14 மற்றும் 13 வயதான சகோதரிகள் இருவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சந்தேகநபர்களால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிகளில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
 குறித்த சிறுமிகள் இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக