விமானி அறைக்குள்
நடிகையை அனுமதித்த பைலட்கள் இருவரை ஏர் இந்தியா நிர்வாகம் சஸ்பெண்ட்
செய்தது. அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின், விமானி
அறைக்குள் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த பாதுகாப்பு
விதிமுறைகள் மீறப்படும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
பெங்களூரில் இருந்து
ஐதராபாத்துக்கு கடந்த மாதம் சென்ற ஏர் இந்தியா விமானத்தில்
கன்னட நடிகை நித்யாமேனன் பயணம் செய்தார். அவர் விமானி அறைக்குள்
சென்று பார்வையிட விரும்பினார். தனது விருப்பத்தை பணிப் பெண்களிடம்
கூறியுள்ளார். அவர்கள் பைலட்டுகளிடம் இத்தகவலை தெரிவித்தனர்.
நடிகை என்றதும்
பைலட்டுகள் உடனடியாக அனுமதி வழங்கி விட்டனர். விமானி அறைக்குள்
கூடுதலாக இருக்கும் இருக்கையில் நித்யாமேனன் அமர்ந்து பயணம் செய்தார்.
இச்சம்பவம் குறித்து அந்த விமானத்தில் பயணம் செய்த மற்றொரு பயணி ஏர்
இந்தியா நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
இதன் அடிப்டையில்
விசாரணை நடத்திய
ஏர் இந்தியா நிர்வாகம், விமானி
அறைக்குள் நடிகையை அமர வைத்த பைலட்டுகள் ஜெகன் ரெட்டி, கிரண்
ஆகியோரை நேற்று சஸ்பெண்ட் செய்தது. இச்சம்பவம் குறித்து விமான போக்குவரத்து
துறை இயக்குனரகம் விசாரணை நடத்துகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக