பிரான்ஸ் நாடானது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து மிகச் சிறந்த சுற்றுலாத் தளமாக உலக தரவரிசையில் முதலிடத்தை இடம்பிடித்துள்ளது.
ஈபிள் கோபுரம் மற்றும் மோண்ட் செயிண்ட் மைக்கேல் ஆகிய இரண்டு இடங்களும் முக்கிய சாதனை படைத்துள்ளன.
இந்த அறிக்கையினை பிரான்ஸ் நாட்டின் சர்வதேச போட்டி நிறுவனமான DGCIS தெரிவித்துள்ளது.
2012ல் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2011ல்இருந்ததை விட 81.4 மில்லியன் அதிகமாகியுள்ளது.
உலகின் பல பகுதிகளில் பொருளாதார பிரச்சனைகள் ஏற்பட்டாலும் 2012 வரை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 4 சதவீதம் உயர்ந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் அழகிய கிராமங்களை பார்க்க வரும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 83 சதவீதம் இருந்துள்ளது.
மேலும், ஆசியா சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9.9 சதவீதம்
உயர்ந்துள்ளது. சீனாவில் இருந்து மட்டும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 23.3
சதவீதமாக உள்ளது. அவர்களில் இன்றைய நாள் வரை 1.4 மில்லியன் பேர்கள்
பார்வையாளர்களாக உள்ளனர்.
மேலும் இந்த சுற்றுலாவுக்கான செலவுகளில் பிரான்ஸ் விடுதிகளின் வரவானது 35.8 பில்லியன்னாக உள்ளது என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் சுற்றுலாத் தளங்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பல பிரச்சனைகள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மார்ச் மாதத்தில் சீன சுற்றுலாப் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் பணங்கள்
பரித்து வைக்கப்பட்டன. அதன் பின்பு பிரான்சின் சுற்றுலா அமைச்சர் சில்வியா
(Sylvia) சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பை கொண்டு வந்தார்.
பின்பு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகளிடம் கொள்ளை,
விபத்து, மற்றும் பல்வேறான பிரச்சனைகளால் ஈபிள் கோபுரம் மூடப்பட்டது.
இன்னும் எண்ணற்ற பிரச்சனைகளும், தீவிரவாதங்களும் வளர்ந்து கொண்டு தான்
உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக