ஊசியின் கண் அளவு இடத்தில் பைபிள் வசனத்தை எழுதி சாதனை படைத்துள்ளார் பிரிட்டனை சேர்ந்த கிரகாம் ஷார்ட்.
பிரிட்டனை
சேர்ந்தவர் கிரகாம் ஷார்ட்(வயது 67), இவர் மிகச் சிறிய எழுத்துக்களில்
அதாவது ஊசியின் கண் அளவு இடத்தில் பைபிள் வசனத்தை எழுதி சாதனை
படைத்துள்ளார்.
மைக்ரோஸ்கோப் வழியாக மட்டுமே பார்க்கக்கூடிய அந்த எழுத்துகள் அடங்கிய
தங்க ஊசி, பிரிட்டனில் நடந்த கண்காட்சியில் 80 லட்ச ரூபாய்க்கு
விற்கப்பட்டது.
இதனை உருவாக்க இவர் 320 மணிநேரம் கடுமையாக உழைத்துள்ளார்.
"ஊசியின் கண் வழியே, ஒட்டகங்கள் சென்றாலும், இறைவன் இடத்தை
பணக்காரர்களால் அடைய முடியாது" என்ற வசனத்தையே அவர் எழுதியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக