சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

21 ஜூலை, 2013

சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் பொறுப்பு அந்தந்த மாகாணசபைகளிடமே ஒப்படைக்க வேண்டும். பசிலுக்குப் பதிலடி கொடுத்தார் விக்னேஸ்வரன்

 
மாகாணசபைகளின் காணி காவல்துறை அதிகாரங்களை பறித்துக் கொள்ளும் முடிவு தற்கொலைக்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
 
“மாகாணசபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை ஒப்படைக்காமல் அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை.
 
மாகாணங்களில் சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் பொறுப்பு அந்தந்த மாகாணசபைகளிடமே ஒப்படைக்க வேண்டும்.
 
வடக்கு மாகாணத்தில் தற்போது நிலை கொண்டுள்ள சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினர் அனைவரும் சிங்களவர்களே.
 
அங்கு, சிறிலங்கா இராணுவத்தின் 15 படைப்பிரிவுகள் முகாமிட்டுள்ளன.
 
இந்த செறிவான படைக்குவிப்பு மக்களுக்குப் பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.
 
மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள வழங்கப்பட்டால், தனியான இராணுவத்தை அமைக்க வழிவகுத்து விடும் என்றும், அது சிறிலங்கா இராணுவத்துக்கு இணையாக வலுப்பெற்று விடும் என்றும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.
 
இந்தக் கருத்து தமிழர்கள் மீதான நம்பகத்தன்மை குறைவால் ஏற்பட்டுள்ளது.
 
இதுபோன்ற அச்சங்கள் முற்றிலுமாக நீங்க வேண்டும். இத்தகைய கருத்துகள் நீங்குவதற்கு நீண்டகாலம் பிடிக்கும்.
 
நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலமே இந்த நிலையை மாற்ற முடியும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக