எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர
கூட்டமைப்பையா, தமிழ் தேசிய கூட்டமைப்பையா ஆதரிப்பது? என்கிற
தீர்மானத்துக்கு வர முடியாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரிய
தடுமாற்றத்தில் உள்ளது.
அரசைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று ஒரு சாராரும், தமிழ் தேசிய
கூட்டமைப்பைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று இன்னொரு சாராரும் வரிந்து
கட்டிக் கொண்டு நிற்கின்றார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ரபீக் ரஜாப்தீன்
கருத்துக் கூறுகையில் கிழக்கு மாகாண சபை தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸை அரசு
ஏமாற்றி வருகின்றது, எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பை வட தேர்தலில் ஆதரிப்பதன்
மூலம் சிறுபான்மை மக்களின் பலத்தை மு. கா அரசுக்கு காட்டும் என்றார். மு.
காவுடன் கூட்டுச் சேர்ந்து வடக்கில் ஆட்சி அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு
தயாராக உள்ளது என்று கூறினார்.
ஆனால் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவிக்கையில் அரசில் பங்காளியாக மு.
கா உள்ளது, அப்படி இருக்கின்றபோது அரசை ஆதரிப்பதை தவிர மு. காவுக்கு வேறு
மார்க்கம் கிடையாது என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக