பிரான்ஸில் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளம் பெண் ஒருவரும், அவரது கணவரும், பெண்ணின் காதலரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகாத உறவின் மூலம் பெற்ற பிள்ளை காரணமாக குடும்பத்தில் முரண்பாடு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அழுத்தம் காரணமாக குறித்த பெண் குழந்தையையும் கொல்ல முயற்சித்துள்ளதுள்ளதுடன், தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
எவ்வாறெனினும் பெண்ணுக்கும் குழந்தைக்கும் உயிராபத்து ஏற்படவில்லை.
2010ம் ஆண்டு முதல் வேறும் இலங்கையர் ஒருவருடன் குறித்த பெண் தொடர்பு பேணி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆத்திரமுற்ற கணவர் பெண்ணை தாக்கியதாகவும், இந்தக் குழந்தை குறித்த காதலனுக்கு பிறந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக