இலங்கை மற்றும் உகண்டா நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு தொடர்புகளை
விரிவுப்படுத்தும் நோக்கில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ
உகண்டாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
நேற்று உகண்டா சென்றடைந்த கோத்தபாயவை, அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர்
ஜெனரல் ஜேஜே ஒடோங், எண்டபே விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.
பாதுகாப்புச் செயலாளர் 5 நாள் அதிகார பூர்வ பயணத்தை மேற்கொண்டு உகண்ட
வந்துள்ளதாக அந்த நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன்
தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாதுகாப்புச் செயலாளர், உகண்டா ஜனாதிபதி முஸேவேனி, படைகளில் தளபதி
ஆகியோரை சந்தித்து இரண்டு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு விவகாரங்கள்
தொடர்பில் பேச்சு நடத்த உள்ளார்.
அத்துடன் முர்ச்சீசன் நீர்வீழ்ச்சி, தேசிய பூங்கா, லுகாஸி சீன
கூட்டுத்தாபனம் ஆகியவற்றும் விஜயம் செய்ய உள்ளார். மேலும், உகண்டாவில்
முதலீடு செய்வது தொடர்பில் இலங்கையை சேர்ந்த முதலீட்டாளர்கள் ஆர்வம்
கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக