
மன்னார் திருக்கேதிஸ்வரத்தில் உள்ள வீடொன்றின் பின் பகுதியில் காணப்பட்ட மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து
மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருக்கேதிஸ்வரத்தைச் சேர்ந்த ரீ.கஜேந்திரன் (வயது-25) என்ற இளைஞரே
குறித்த மர்மப்பொருள்ள வெடித்து படுகாயமடைந்து மன்னார் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை மதியம் தனது வீட்டின் பின் பகுதியில் காணப்பட்ட குறித்த மர்மப்பொருளை தொட்ட போது அது வெடித்துள்ளது.
உடனடியாக குறித்த இளைஞர் மன்னார் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரனைகளை மன்னார் வைத்தியாலை
பொலிஸார் மேற்கொண்டு வருவகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக