முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையில், சிறிலங்காப்
படையினரால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாதுகோபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழிகாட்டுதலின் கீழ்,
59வது டிவிசனின் முதலாவது பிரிகேட்டினால் (59-1) இந்த தாதுகோபம்
கட்டப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண பிரதி பிரதம சங்கநாயக்கர் வண.எட்டம்பகஸ்கட சிறி கல்யாண
திஸ்ஸ நாயக்க தேரரின் ஆசியுடன் முல்லைத்தீவு படைத் தலைமையகத்துக்கு
அண்மையில் இந்த தாதுகோபம் அமைக்கப்பட்டுள்ளது.
போரில் உயிரிழந்த படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இந்த
தாதுகோபத்தைக் கட்டுவதற்கு சுவிற்சர்லாந்தில் உள்ள சிங்களவர் ஒருவர்
நிதியுதவி அளித்துள்ளார்.
இந்த தாதுகோபம் திறப்பு விழாவில், முல்லைத்தீவு படைத்தலைமையக தளபதி
மேஜர் ஜெனரல் எல்.சி.ஆர்.மார்க், சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் லலித்
சந்திரதாச உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெருமளவு பௌத்த பிக்குகளும் கலந்து கொண்ட இந்த நிகழ்வுக்கு அந்தப்
பகுதியை சேர்ந்த தமிழ்மக்களும் கட்டாயமான முறையில் அழைத்து
வரப்பட்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக