வடமாகாண
சபை தேர்தலை முன்னிட்டு யாழில் பொலிஸ் சோதனை சாவடிகளை அதிகரிக்கவுள்ளதாக
யாழ்.பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி இன்று தெரிவித்தார்.
யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்ற வாரந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
‘வடமாகாண சபை தேர்தலில் யார், எந்த
கட்சியில் போட்டியிடுகின்றார்கள் என்பது பற்றி எமக்கு பிரச்சினை இல்லை.
யார் போட்டியிட்டாலும், தேர்தல் பிரசார காலங்களில் பொலிஸ் பாதுகாப்பு
கட்சியினால் கோரப்பட்டால், நிச்சயமாக பாதுகாப்பு வழங்குவோம்.
அத்துடன், எதிர்வரும் காலங்களில், யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சோதனைச் சாவடிகளை அதிகரிக்கவுள்ளோம்’ என்றும் அவர் மேலும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக