திருகோணமலை - புல்மோட்டை வீதியிலுள்ள வேலூர் என்னும் இடத்தில் இன்று திங்கட்கிழமை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
திருகோணமலை, அநுராதபும் சந்தியில் இருந்து முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்படும்போது கைப்பற்பபட்டதாக பொலிஸார் தெரிவத்தனர்.
இதன்போது 200 டைனமைட்டுக்கள், 6.5 மீற்றர் வெடி மருந்து நூல் என்பவையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
உப்புவெளி குற்றத்தடுப்பு பொலிஸ் பரிசோதகர் எம்.சவாகீர் தலைமையிலான குழுவினர் கடற்படையின் உதவியுடன் இதனை கைப்பற்றியுள்ளர்.
இந்த முச்சக்கரவண்டியில் பயணம் செய்த இறக்கண்டி பகுதியை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக