பெண் ஒருவருடன் ஹோட்டல் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்த நபர் ஒருவர் அவ்வறையில் உயிரிழந்துள்ளார்.
கல்கிசையைச் சேர்ந்த பெண்ணுடன் உயிரிழந்த நபர் மகரகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறையொன்றை வாடகைக்கு பெற்றுள்ளார்.
தெஹிவளை நகரசபையில் சேவையாற்றும் 56 வயதான நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் 37 வயதான பெண் ஒருவருடன் இன்று (29) காலை அறையை வாடகைக்கு பெற்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஹோட்டல் ஊழியர்கள் மகரகம பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பு காரணமாக அந்நபர் இறந்திருக்க கூடும் எனவும், குறித்த பெண்ணுடன் உயிரிழந்த நபருக்கு கள்ளத் தொடர்பு இருந்திருக்க கூடும் எனவும் பொலிஸார் சந்கேம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக