வட மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒருவரை நியமிப்பதற்கு
அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்து மகா சபையினால் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அச் செய்திக் குறிப்பில், தீர்க்கமான ஒரு கால கட்டத்தில் நடைபெறவுள்ள
வட மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் தெரிவிற்கு பொருத்தமான ஒருவரை
நியமனம் செய்ய வேண்டியது முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு தெரிவு
செய்யப்படுபவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுவான ஒருவராக இருத்தல்
சாலச் சிறந்ததாகும். அதே நேரம் அவர் உயர் கல்வித் தகமை பெற்றவராகவும் சமூக
ரீதியில் அப்பழுக்கற்ற மனிதநேய சிந்தனையுள்ளவராகவும் இருத்தல்
அத்தியவசியமானதாகும்.
எனவே தமிழ்த் தலைமைகள் ஒன்று பட்டு சுமூகமான முடிவுக்கு வந்து இத்தகைய
தகமை சார் நபரை ஏகோபித்த தெரிவாக முதலமைச்சராக முன்னிறுத்துவதன் ஊடாக
எதிர்கால சந்ததியினருக்கும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட சிறந்த
முன்னுதாரணம் ஒன்றை வழங்கக் கூடியதாக இருக்கும் என்றுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக