யாழ்ப்பாணம் அச்செழு இராணுவ முகாம் அகற்றப்பட்டு இராணுவ முகாம்
அமைக்கப்பட்டிருந்த ஆதனங்களும் வீடுகளும் உரிமையாளர்களிடம்
கையளிக்கப்படவுள்ளன. இதற்காக குறித்த இராணுவ முகாமிலிருந்த பொருட்கள்
அகற்றப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
யாழ்.பலாலி இராணுவத் தளத்திற்கு அடுத்த நிலையில் பாதுகாப்பான இராணுவத்
தளமாக இருந்து வந்த அச்செழு இராணுவ முகாம், நீர்வேலி மகசின் வீதியை
மத்தியாகக் கொண்டு சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பொது மக்களின் 75 மேற்பட்ட
வீடுகளையும் உள்ளடக்கி அமைக்கப்பட்டிருந்தது.
இம் முகாமை மக்களிடம் கையளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அச்செழு இராணுவ முகாமில் இருந்த இராணுவத் தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை வசாவிளான் பகுதியில் உள்ள இடம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
முகாம் உள்ள பொருட்கள் அகற்றப்பட்ட பின்னர் உத்தியோக பூர்வமாக முகாமில் உள்ளடக்கியிருந்த வீடுகள் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்கள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
இம் மாதத்திற்குள் முகாம் மூடப்பட்டு பொதுமக்களின் வீடுகளும் ஆதனங்களும் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

|
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக