சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

13 ஜூலை, 2013

தமிழகத்தில் ஈழத்தமிழ்ச் சிறுமி மீது ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோக முயறச்சி!

தமிழ்நாடு – ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பவானிசாகர் பகுதி அகதி முகாமில் வசிக்கும் இலங்கை சிறுமி ஒருவருக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பவானிசாகர். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும், இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த ஒரு மாணவியை, அப்பள்ளியில் பணியாற்றும் ஓவிய ஆசிரியர் தியாகராஜன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக, மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால், கொதிப்படைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், நேற்று (11) மாலை திடீரென பவானிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளியை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த பவானிசாகர் பொலிஸ் பொறுப்பதிகாரி சுப்புரத்தினம், எஸ்.ஐ.,கணேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முதன்மை கல்வி அதிகாரியிடம், இதுபற்றி கூறி, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக, அதிகாரிகள் உறுதியளித்ததால், பெற்றோர் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக