சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

13 ஜூலை, 2013

ஈழத் தமிழர்கள் படுகொலையில் கூட்டுக் குற்றவாளி தி.மு.க. !

ஈழத் தமிழர்கள் படுகொலையில் கூட்டுக் குற்றவாளி தி.மு.க. ஆனால், தமிழகத்திலே மாணவர்களின் கொந்தளிப்பு தங்கள் பக்கம் திரும்பியதும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடியவர்கள் அவர்கள்.

ஈழப் பிரச்சினையை மையமாகவைத்து மத்திய அரசுக்கான தன் ஆதரவை விலக்கிக்கொண்ட தி.மு.க., ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸிடம் வேண்டி விரும்பி ஆதரவு பெற்றதை எப்படிப் பார்க்கிறீர்கள்? என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கே மேற்கண்டவாறு மதிமுக பொதுச்செயலர்   வைகோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர்மேலும் கூறியுள்ளதாவது,

அப்போது சத்தியமூர்த்தி பவனிலும் ஒரு கொண்டாட்டம் நடந்ததே? அதற்கெல்லாம் இப்போது என்ன பதில் சொல்வார்கள்? இந்த ராஜ்யசபா தேர்தலில் தோற்றால்தான் என்ன? நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடியபோது எந்தத் தியாகத்துக்கும் தயாராக, உறுதியாகப் போராடுகிறார் என்று நெக்குருகி உலகத் தமிழர்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் அன்றைய கலைஞர். ஆனால் இன்றோ, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக எதையும் காவு கொடுத்துச் சமரசம் செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு அண்ணா உருவாக்கிய இயக்கத்தைக் கொண்டு சென்றுவிட்டார்.

வான்புகழ் வள்ளுவப் பெருந்தகை ‘மானம்’ என்ற அதிகாரத்தில்,

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று!

என்று எழுதியிருப்பது இன்றைய கருணாநிதிக்காகத்தான்! என்றார்.

ஈழத் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ எம்.பி-க்களே, எங்களுக்கு மாகாண சுயாட்சி கிடைத்தால் போதும் என இந்திய அரசிடம் பேசிச் சென்றுள்ளனர். ஆனால், தமிழக ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள், தனி ஈழம் கேட்கிறீர்கள். இந்த முரண்பாடு பற்றி? என்ற கேள்விக்கு வைகோ அளித்துள்ள பதில் வருமாறு,
 நான் அவர்களைக் குறை சொல்ல விரும்பவில்லை. அவர்களை எப்போதும் ஆபத்துச் சூழல் சுற்றி வளைத்திருக்கிறது. யாருடைய உயிருக்கும் அங்கு பாதுகாப்பு இல்லை. இந்தப் பாதுகாப்பற்ற சூழல்தான் அவர்களை இப்படிப் பேசவைத்துள்ளது.
 ஆனால், இந்தத் தமிழ் ஈழத்தைக் கட்டி எழுப்பக்கூடிய முழுப் பொறுப்பில் அவர்கள் இல்லை. புலிகளின் ஆதரவோடு தேர்தலில் போட்டியிட்டார்களே தவிர, தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுக்கும் முன்னணியினர் அவர்கள் இல்லை.
அவர்களின் கருத்து ஒட்டுமொத்தத் தமிழ் ஈழ மக்களின் கருத்தும் அல்ல. அது ஈழத் தமிழர்களின் கோரிக்கையும் அல்ல.
 அவர்களை இந்திய – இலங்கை அரசுகள் பகடைக்காயாக உருட்டி விளையாடுகின்றன.
இது, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்காக உலகம் இதுவரை கண்டும் கேட்டும் இராத பல வீரச் சமர்களை நடத்தி, உதிரம் சிந்திச் சென்றார்களே… அந்த தியாகிகளுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக