சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

10 ஜூலை, 2013

இலங்கை நவம்பருக்குள் முன்னேற்றத்தை காட்ட வேண்டும் – பிரித்தானியா எச்சரிக்கை



எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கு முன்னர், நல்லிணக்கம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியவற்றில் சிறிலங்கா முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்று பிரித்தானியா கூறியுள்ளது.
பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவர் கிறிஸ் நொனிஸ், நேற்று பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட்டை சந்தித்துப் பேசினார்.
இதன்போதே, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்ததாவது,
நவம்பர் மாதம் நடக்கவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கு முன்னர், நல்லிணக்கம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியவற்றில் சிறிலங்கா முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, 2011இல் தங்காலையில், படுகொலை செய்யப்பட்ட பிரித்தானியரான குரம் சைக்கின் வழக்குத் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தலையீடுகளின்றி இந்த வழக்கில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பது முக்கியமானது என்றும் அலிஸ்ரெயர் பேர்ட் வலியுறுத்தியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக