சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

10 ஜூலை, 2013

யாழில் கொள்ளையடிக்கும் நகைகளை காதலிகளுக்கு போட்டு அழகு பார்த்த ஈ.பி.டி.பி விஜயகாந்

யாழில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஈ.பி.டி.பியின் உறுப்பினரான சுதர்சிங் விஜயகாந்துக்கு 5 காதலிகள் இருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் கொள்ளையடிக்கும் உடமைகளை தனது காதலிகளுக்கு போட்டு அழகு பார்ப்பதாக இவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழில் உள்ள வர்த்தகர்களிடம் தொலைபேசியில் கப்பம் பெறுவது தொடக்கம் தென்பகுதி அழகிகளைக் கொண்டு வந்து யாழில் முக்கிய விடுதிகளில் விபச்சார நடவடிக்ககைகளுக்கு ஈடுபடுத்தியதாக யாழ்.குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
திருட்டு நகைகளை அடகு வைப்பது, அடிதடிக் கலாச்சரத்தில் இளைஞர்களை இணைப்பது, விதவைப் பெண்களை விபச்சார நடவடிக்கையில் ஈடுபட வைப்பது, பாடசாலை பெண்களை தனது வெள்ளை நிறக் காரில் ஏற்றி சுற்றித்திரிவது போன்ற கலாச்சர சீரழிவுகளுக்கு முக்கிய புள்ளியாக அமைந்தவர் விஜயகாந்.

யாழ். நகரிலுள்ள வங்கி ஒன்றின் ஊழியரின் வீட்டில் திருடப்பட்ட நகைகளை அதே வங்கியில் அடகு வைக்கக் கொண்டு சென்றிருந்தபோதே நகைகள் இனங்காணப்பட்டு விஜயகாந் கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
யாழ். திருநகரைச் சேர்ந்த விஜயகாந் மற்றும் அதே இடத்தைச் சேர்ந்த கோபி,  வசந்தன், சுபாஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
இளம் பெண்களை கொழும்புக்கு கொண்டு சென்று விபச்சார நடவடிக்கை முகவர்களை, பெண்களுக்கு அறிமுகப்படுத்தும் சமூகச் சீரழிவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக