சீன இராணுவத்தினர் கடந்த ஜூன் மாதமும் ஜம்மு காஷ்மீரின் லடாக் ஊடாக
இந்திய எல்லைப்பகுதிக்குள் அத்து மீறி நுழைந்து இந்திய அதி நவீன
கண்காணிப்பு கமெகராக்களை சேதப்படுத்திச் சென்றிருப்பதாக தகவல்
வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் சீன இராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதிக்குள்
அத்துமீறி உள்நுழைந்து ஆக்கிரமிப்பு செய்த போது, இந்திய அரசு கடும்
எதிர்ப்பு தெரிவித்ததால் தனது படைகளை வாபஸ் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில் கடந்த மாதம் ஜூன் 17ம் திகதி, லடாக்கின் ஊடாக லே எனும் எல்லைப்பகுதிக்குள் நுழைந்த சீன இராணுவம், அங்கிருந்த கண்காணிப்பு பதுங்கு குழிகளை சிதைத்து, கெமராக்களுக்கான ஒயர்களை சேதப்படுத்தியதுடன், கெமராக்களையும் கொண்டு சென்றுவிட்டதாகவும், பின்னர் இடம்பெற்ற கொடியமர்வுக் கூட்டத்தில் இந்தியத் தரப்பு கடுமையான அழுத்தங்களை பிரயோகித்ததை அடுத்து சீன இராணுவம் அவற்றை (உடைந்த நிலையில்) திரும்பக்கொடுத்ததாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற கொடியமர்வுக் கூட்டத்தின் போது எல்லைப்பகுதியில் கண்காணிப்பு கோபுரத்தை இந்தியா அமைத்திருந்தமைக்கு சீன இராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன இராணுவத்தின் ஊடுறுவலை கண்காணிக்கவே இந்தியப் படைகள் இந்த கோபுரத்தை அமைத்திருந்தன.
இந்நிலையிலேயே இந்த ஊடுறுவல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. லே பகுதிக்குள் ஊடுறுவிய சீன இராணுவம் சரளமாக ஹிந்தி பேசுவதாகவும், அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அந்த இடங்களை விட்டு காலி செய்யும் படி எச்சரித்துள்ளதாகவும், அது தங்கள் நாட்டுப் பகுதி எனக்கூறுவதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி சீன சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த ஊடுறுவல் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இதேவேளை இந்த ஊடுறுவல் சம்பவத்தை இந்திய இராணுவத் தலைமையகம் பகிரங்கப்படுத்தாமல் மறைத்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக