இம்முறை France2 மற்றும் TF1 தொலைக்காட்சிகளில் வருடாவருடம் வரும்
தேசியதினத்திற்கான ஜனாதிபதி உரை இடம்பெறுமா என்பதே நிச்சயமில்லாது உள்ளது.
BVA செய்த கணக்கெடுப்பின்படி 51 சதவீதமான மக்கள் ஒவ்வொருவருடமும் ஜனாதிபதி
உரையாற்ற வேண்டியது அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளனர். 41 சதவீதமானோர்
உரையாற்றலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
BVA வின் Céline Bracq" இந்தக் கட்டாய உரையின் அர்த்தம் புரிந்து
கொள்ளப்படவில்லை. இது ஜனாதிபதிக்கே அபத்தமானதாகத் தோன்றலாம். உரை அவசியம்
என வாக்களித்தவர்களில் 58 சதவீதமானோர் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவாளர்களே.
நாடு இன்று இருக்கும் கவலைக்கிடமானதும், நாளை பற்றிய நிச்சயமற்ற நிலையிலும்
ஜனாதிபதி உரையாற்றுவது மிக அவசியமானது" எனத் தெரிவித்துள்ளார்.
பொருளாதாரப் பிரச்சினையே அனைத்தையும் மேலோங்கி உள்ளது. 48 சதவீதமானோர்
வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்றும் 34
சதவீதமானோர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றி என்றும் 24 சதவீதமானோர்
மக்களின் கொள்வனவுத் திறன் அதிகரித்தல் பற்றி என்றும் கூறியுள்ளனர்.
வேலையில்லாத் திண்டாட்டத்தின் தீவிரத்தன்மை மிகவும் முக்கியமானதால் அது
பற்றிப் பேசுதல் அவசியம் என தெரிவித்துள்ளார். கடந்த வாரம்
அமைச்சர்களை அவசரமாகக் கூட்டிய பிரான்சுவா ஒல்லோந்த் அவர்கள் மீது மிக
அவசரமான பெறுபேறுகள் தேவை என பெரும் அழுத்தத்தைச் சுமத்தியதாகவும் இந்த வேலையில்லாத் திண்டாட்ட நிலைமயைத் தலைகீழாக மாற்றும் சக்தி யாரிடமும் இல்லை
என்றும் ஒரு அமைச்சர் கூறியதாகவும் Céline Bracq தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு அமைச்சரின் கூற்றின் படி " சார்க்கோசியின் மீள் வருகை,
Delphine Batho வினை அமைச்சரவையிலிருந்து நீக்கியமை போன்றவை தொடர்பாகக
ஜனாதிபதியிடம் கேள்விகள் கேட்கப்படல் வேண்டும். ஆனாலும் இதுவரை எழுத்திக்
கொடுத்த கேள்விகளும் அதற்கான பதில்களுமே தேசிய தின நேர்காணலில் வந்துள்ளன.
இதனை மாற்றியமைக்க வேண்டும். ஒரு சட்டத்தை மாற்ற இன்னொரு சட்டம். அதனை
மாற்ற இன்னொன்று என சட்டங்கள் எல்லாம் எமக்கே புதிராக உள்ளது. இதனை ஒன்று
சேர்த்து ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்.' என்று தெரிவித்ததாகவும்
தெரிகின்றது.
ஜனாதிபதியை நேர்காணல் செய்யப்போகும் Claire Chazal மற்றும் Laurent
Delahousse எவ்வாறு தம்மைத் தயார் செய்வார்கள் என்பதும் ஜனாதிபதி
மாளிகையின் அறிவுறுத்தலின் படி இயங்குவார்களா அல்லது ஊடகதர்மத்தைக்
காப்பார்களா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக