சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

12 ஜூலை, 2013

பெளத்த தீவிரவாத அமைப்பான பொது பலசேனாவைத் தடை செய்ய இணையத்தளம்!





 கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனாவை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்து இணையம் (Online Petition) ஒன்று இன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொது பல சேனா அமைப்பினர் சிறிலங்காவின் சுதந்திரத்தையும் பன்முக கலாச்சாரத்தையும் நசுக்கி வருவதாக அந்த இணையத்தை உருவாகிய மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
 
மற்ற மதத்தவர்களை பற்றி அவர்களது பேச்சு நடவடிக்கைகள், மிருகத்தனமான அணுகுமுறைகள் ஆகியன ஜனநாயக முறையற்றதாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பௌத்த மதத்தை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் மாற்று மதத்தவர்களின் அடிப்படை உரிமைகளை அவர்கள் மறுக்கின்றனர்.
முஸ்லிம்களின் கடைகள் மீதான தாக்குதல், ஹலால் சான்றிதழை ஒழிக்க முயற்சி, கிறிஸ்த்தவ மதத்தளங்கள் மீதான தாக்குதல் என்று இவர்களது அட்டகாசம் தொடர்கின்றது. 
தற்பொழுது முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் உடைகளை தடைசெய்யுமாறு பிரசாரம் செய்து வருகின்றனர். 
எனவே இவர்களது காட்டுமிராண்டித்தனத்தை ஒழிப்பதற்கும் சமூகத்தில் கௌரவத்தையும் மத மற்றும் கலாச்சாரத்தை நிலை நிறுத்த அனைவரையும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக