சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

26 ஆகஸ்ட், 2013

வடக்கில் ராணுவத்தை நிலைகொள்ள வைப்பதற்கு புதிய திட்டமா -அல்லது உள்னோக்கம் கொண்டவையா

இலங்கை, வடபகுதி ,குடா நாட்டு கடல்வழியாக  50 இற்கு மேற்பட்ட பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தமிழகத்திற்கு ஊடுருவியுள்ளதாக  இந்திய மத்திய அரசும், அதன் புலனாய்வு அமைப்பும் இரண்டாவது முறையாகவும் கூறியுள்ளது.
இந்த அறிவுப்பு உண்மையானதுதானா அல்லது உள்னோக்கம் கொண்டவையா என்பது தொடர்பில் பல வாதங்கள் எழுந்துள்ளன.
.
இதெவேளை சிங்கள அரசும் இந்தியாவின் இந்த அறிக்கையினை முதலில் அடியோடு மறுத்துள்ளது. ஆனால் இரண்டாவது அறிக்கை வந்தவுடன் இலங்கை அரசு  அதற்கான எதிர்ப்பு அறிக்கையினை  முன்புபோல காட்டமாக வெளியிடவில்லை மாறாக  வடக்கில் ராணுவ இருப்பே  இப்படியான ஊட்ருவல்கலை தடுக்கவே என வடக்கில் உள்ள சிங்கள ராணுவ இருப்பினை நியாயப்படுத்தும் நோக்கில் கருத்துக் கூறியுள்ளது.
இது தொடர்பாக போர்க்குற்றவாளி கோத்தா கூறுகையில்  இலங்கையில்  எந்தப் பகுதியிலும் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் இடம ளிக்கப் போவதில்லை எனவும்  பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஒன்று யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த விருப்பவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. என்றும் . பயங்கரவாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை படையினர் எடுத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.    யாழ்ப்பாணத்தில் 99 வீதம் தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர். அங்கு படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.   எனவே, பாகிஸ்தான் தீவிர வாதிகளினால் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடிய சாத்தியம் எப்போதும் ஏற்படாது. எனினும் இந்திய கரையோரங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனக் கூறியுள்ளார்.
.
ஆகவே இந்திய புலனாய்வின் அறிக்கையும், சிறிலங்கா அரசின் தற்போதைய  கருத்தும்,தமது பாதுகாப்பு செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக கட்டவிழ்த்துவிடப்பட்டதா?
.
இந்திய கடற்படையும், சிங்கள கடற்படையும் சேர்ந்து பாக்கு நீரிணையில் ரோந்து செல்வதற்கான திட்டம், ராணுவ பயிற்சி திட்டம், நிலம் கடல்சார் போர் ஒத்திகை இலங்கையுடனான பாதுகாப்பு உதவிகள் ஒத்துழைப்புக்கள் ஆகியவற்றை நியாயப்படுத்தும் ஒரு கருவியாக இந்தியா இந்த அறிக்கையினை வெளியிட்டிருக்கலாம். இதேபோல வடக்கு கடல்பிராந்தியத்திலும் வடக்கிலும்  தனது படைகளின் இருப்பினை நியாயப்படுத்த சிறிலங்கா அரசும் இந்த கருத்திற்கு இப்போது உடன்படலாம்.
ஆனால் இந்திய மத்திய அரசின் அதும், மஹிந்த அரசினதும் இந்த பாகிஸ்தான் பயங்கரவாதம் தொடர்பான அணுகுமுறைகள் ஈழம் மற்றும் தமிழகத்தின் மீது அழுத்தங்களை கொடுக்கும் அணுகுமுறையாக மாறலாம் அல்லது அதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக