இத்தாலியின் மெஸ்சினா நகரில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த 15 வயதான
சிறுமி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இத்தாலி
பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி தனது ஆசிரியரான 19 வயதான இளைஞருடன் ஏற்படுத்தி கொண்ட காதல் தொடர்பை பெற்றோர் எதிர்த்தன் காரணமாகவே சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் மெஸ்சினாவில்
உள்ள வைத்தியாசலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மரண விசாரணைகளின்
பிறகு சடலம் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.
உயிரிழந்த சிறுமி, 20 வருடங்களுக்கு
முன்னர் இத்தாலி சென்ற நீர்கொழும்பை சேர்ந்த சிசிர மற்றும் மாரி ஆகியோரின்
கனிஷ்ட புதல்வி எனவும் இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இத்தாலி
சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக