தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது
என்று, வடமாகாணத்துக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர்
சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள வானொலி ஒன்றுக்கு
வழங்கிய தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்…
சட்ட ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று
கூறமுடியாது. தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராக
ஆயுதமேந்தி போராட்டம் நடத்திய விடுதலைப் போராளிகளாகவே அவர்களை தாம்
பார்ப்பதாக சீ.வீ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்
இதற்கிடையில் தமிழர்களின் பிரச்சினையை அறிந்த ஒரே கட்சி தமிழ் தேசியக்
கூட்டமைப்பு எனவும், இதன் காரணமாகவே தமிழர்களுக்காக செயற்பட தமிழ் தேசிய
கூட்டமைப்பை தாம் தெரிவு செய்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக