இலங்கைத்தீவுக்கான ஐ.நா ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களது பயணம்,
சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலகின் மற்றுமொரு கவனத்தினை குவித்திருந்த
நிலையில், எதேச்சாதிகார போக்கில் சிறிலங்கா என ஐ.நா ஆணையாளர் குறித்துரைத்த
கருத்து , அனைத்துலக ஊடகங்களின் இன்றைய மையச்செய்திகளில் ஒன்றாகிவிட்டது.
போருக்கு பிந்திய இலங்கைத்தீவின் சூழலில், சிறிலங்கா
அரசாங்கத்தின் போக்கு அனைத்துலக மட்டத்தில் கடும் கடுமையான விமர்சனங்களை
ஏலவே எதிர்கொண்டு வரும் நிலையில், அனைத்துலக ஊடகங்களில் மற்றுமொரு
மையச்செய்தியாக (எதேச்சாதிகார போக்கில் சிறிலங்கா) ஐ.நா ஆணையாளரின் கூற்று
வெளிவந்திருப்பமை சிறிலங்காவுக்கு மற்றுமொரு கரும்புள்ளியாகவே
கருதப்படுகின்றது.
போர் குற்ற விசாரண ,ஆட்கடத்தல்கள், ஊடகத்துறையினர் மீதான தாக்குதல்கள்
,நில அபகரிப்பு, பாலியல் அச்சுறுத்தல்கள், காணமல் போனோர் விவகாரம், இராணுவ
ஆக்கிரமிப்பு, மத வழிபாட்டு உரிமைகளுக்கான அச்சுறுத்தல்கள் என பல்வேறு
விவகாரங்களில் சிறிலங்கா அரசினது போக்கும் ,அதன்வழி இலங்கைத்தீவில்
மேலெழும் சிங்கள பேரினவாத பூதமும் சிங்களத்தின் மீதான கடும்
விமர்சனங்களுக்கு காரணமாகியிருந்தன.
இந்நிலையில் இலங்கைத்தீவுக்கான ஐ.நா ஆணையாளரின் பயணம் சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலகின் கவனத்தினை பெற்றிருந்தது.
உங்களுடைய அறிக்கை கூட முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்றென மக்கள்
கருதுகின்றனர் என ஐ.நா ஆணையாளருக்கு தெரிவித்திருந்த சிறிலங்காவின் அரசுத்
தலைவர் மகிந்த ராஜபக்ச, அறிக்கையானது சுதந்திரமானதாக இருக்க வேண்டுமென
தெரிவித்திருந்தார்.
பல்வேறு விவகாரங்கள் ஐ.நா ஆணையாளரின் பயணத்தினைச் சுற்றி இருந்ததோடு
தமிழ்மக்கள் மத்தியில் ஓருவித எதிர்பார்ப்பும் இருந்துள்ளமை இங்கு
குறிப்பிடதக்கது.









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக