சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

27 ஆகஸ்ட், 2013

நவனீதம்பிள்ளையை திருமணம் செய்ய விரும்புகின்றேன் –(றவுடி)மேர்வின் சில்வா

நவனீதம்பிள்ளையை திருமணம் செய்ய விரும்புகின்றேன் என பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நாட்டைச் சுற்றி செல்வதற்கு தன்னை இணைத்துக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.

நாட்டின் வரலாற்றை நவனீதம்பிள்ளைக்கு கற்றுக்கொடுக்க விரும்புகின்றேன். இராவண மன்னன் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
விஜய குமாரனுக்கு இளவரசி குவேனியை மணம் முடித்துக் கொடுத்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.. அதேபோன்று, நவனீதம்பிள்ளை விரும்பினால் நாளை அவரை மணந்து கொள்ளத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாருதானையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நவனீதம்பிள்ளைக்கு வரலாற்றைக் கற்றுக்கொடுக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக