“பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் சகோதரியே இலங்கைக்கு விஜயம்
மேற்கொண்டுள்ளார். இவரின் வருகையானது இலங்கைக்கு பாதகமானதொரு
விளைவினையே நிச்சயம் ஏற்படுத்தும்.” என்று இராவணா சக்தி அமைப்பின்
ஏற்பாட்டாளர் சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிங்கள நாடு இங்கு வேற்று இனத்தவருக்கு இடமில்லை.
இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தும் நவநீதம்பிள்ளையினை உடனடியாக
வெளியேற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டர்ர.
நவிப்பிள்ளை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் அவர் தமிழ் தேசியக்
கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளை ஆதரிப்பவர்
அவர் பக்கச்சார்பாக செயற்படுவதை நாம் ஒரு போதும்
ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றும் தேரர் தெரிவித்தார்.
சனல் 4 காணொளிகளைப் பார்த்து விட்டு இலங்கை மீது குற்றம் சுமத்துவதை
ஏற்க முடியாது. அமெரிக்கா பல நாடுகளை ஆக்கிரமித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவினால் செய்யப்பட்ட படுகொலைகள்
தொடர்பில் ஏன் நவிப்பிள்ளை குரல் கொடுக்க வில்லை? எனவும் கேள்வி
எழுப்பினார்.
நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்.
அவர் ஓய்வெடுக்க விடுமுறையினை அனுபவிக்க இலங்கைக்கு வரலாம். ஆனால்
இலங்கையை எதிர்த்து அறிக்கை சமர்ப்பிக்க அவர் வர முடியாது என்றும்
இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக