சீன பெருஞ்சுவர் இலங்கையை சுற்றி அமைக்கப்பட்டு விட்டதோ என்ற சந்தேகம்
ஏற்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இந்துராகாரே தம்மரத்ன
தேரர் தெரிவித்துள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை
கூறியுள்ளார். எதிர்காலத்தில் சீன மொழியை அறியாமல் எதனை செய்ய முடியாத
நிலைமை உருவாகும். நாட்டில் உள்ள நாம் சிங்களம், தமிழ், ஆங்கலம் ஆகிய
மொழிகளை கற்றுக்கொண்டாலும் எதிர்காலத்தில் சீன மொழியை கற்கவேண்டிய கட்டாயம்
ஏற்படும்.
யாழ்ப்பாணம், திருகோணமலை, புத்தளம், நுரைச்சோலை, அக்கரைபற்று,
அம்பாந்தோட்டை பிரதேசங்களில் சீனர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். அத்துடன்
நாட்டின் அனைத்து இடங்களிலும் சீனர்கள் உள்ளனர்.
இன்னும் இரண்டு தசாப்தங்களில் இலங்கை முற்றாக மாறிவிடும். மக்கள் தொகை
மாத்திரமல்ல மொழியும் மாறிவிடும். எதிர்காலத்தில் இரண்டு ஆக்கிரமிப்புகள்
நடக்கலாம் அது மிக பயங்கரமான ஆக்கிரமிப்பாக இருக்க போகிறது. நாட்டில் உள்ள
பிரச்சினைகளுக்கு இன்று தீரர்வில்லை என தம்மரத்ன தேரர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக