இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் பொருளாதார அரசியல் ஆலோசகரான மேகன்
ஃபொஸ்ரர் அம்மையார் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்
தலைமைப்
பணிமனையான “அறிவகத்தில்” பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட
குழுவினருடன் இன்று ( 22.08.2013 வியாழக்கிழமை) சந்திப்பொன்றை
மேற்கொண்டுள்ளார்.
சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த இச் சந்திப்பில் பாராளுமன்ற
உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் நா.வை குகராசா,
வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண
சபைக்கான கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர் த.குருகுலராஜா, தமிழ்த்
தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.சுரேன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பில் வட மாகாண சபைத் தேர்தல் வன்முறைகள் குறித்து தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் பிரதி நிதிகளிடம் மேகன் ஃபொஸ்ரர் அம்மையார்
கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது அண்மையில் நடைபெற்ற தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்
குறித்தும் பூநகரிப் பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் பச்சை உடை
தரித்தோரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்தும் தமிழ்
இளைஞன் ஒருவன் பரந்தன் பகுதியில் தாக்கப்பட்டது குறித்தும் நெடுந்தீவில்
ஈபிடீபி ஒட்டுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அராஜகங்கள் குறித்தும்
அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக