கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை
கடற்படையினர் வழிமறித்து விரட்டி உள்ளனர். மீன்பிடி வலைகளை அறுத்தும்,
மீனவர்கள் மீது கற்கள் வீசியும் தாக்கி உள்ளனர். இதனால் 2வது நாளாக குறைந்த
மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். ராமேஸ்வரத்தில் இருந்து 200க்கும்
மேற்பட்ட விசை படகுகளில் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் கச்சத்தீவு கடல் பகுதியில் நேற்றிரவு மீன் பிடித்து
கொண்டிருந்தனர்.
அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளை
அறுத்து நடுக்கடலில் வீசினர். மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்கி
விரட்டியடித்தனர். இதனால் அச்சமடைந்த தமிழக மீனவர்கள் குறைந்த மீன்களுடன்
இன்று காலை கரை திரும்பினர்.
அதேவேளை, இலங்கை கடற்படையால் சிறை பிடித்து செல்லப்பட்ட பாம்பன்
மீனவர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க கோரி பாம்பன் கடலில் இறங்கி
மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அனைத்து மீனவர் சங்க
தலைவர்கள் சிப்பிசேசு, இருதயம், சைமன், வில்சன், ஜான்சன் உள்பட பலர் கலந்து
கொண்டனர். 35 பேரை விடுவிக்கும் வரை காலவரையற்ற போராட்டம் நடத்த போவதாக
மீனவர் சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக