சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

27 ஆகஸ்ட், 2013

ஐ.நா குழுவினர் மீது சினைப்பர் தாக்குதல் நடாத்தியவர் மீது நடவடிக்கை



சிரியாவின் நச்சு வாயு தாக்குதலை கண்காணிப்பதற்கு நேற்று டமாஸ்க்கஸ் சென்ற ஐ.நா குழுவினர் மீது பல தடவைகள் சினைப்பர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் முதலில் சென்ற கார் மீது பலதடவைகள் குண்டு துளைத்துள்ளது, ஆனால் அதிகாரிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
தாக்குதலைத் தொடர்ந்து, அதிகாரிகள் வேறு காரில் ஏறி பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.
இந்தத்தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லையென்று ஆஸாட் தெரிவித்துள்ளார், ஆனால் உயிராபத்து மிக்க இந்தத் தாக்குதலை நடாத்தியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென டென்மார்க் வெளிநாட்டு அமைச்சர் வில்லி சுவிண்டேல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இன்று செவ்வாய் சிரியா தலைநகர் டமாஸ்கஸ்சில் வரலாற்றுப்புகழ் மிக்க ஆர்மீனிய தேவாலயத்தின் மீது நான்கு மோட்டார் கிரைனைட்டுக்கள் ஏவப்பட்டுள்ளன.
சுற்றுமதிலால் சூழப்பட்டுள்ள இந்தக் கலாச்சார மையம் பலத்த சேதமடைந்துள்ளது.
இந்தச் செய்தியை எழுதிக்கொண்டிருக்க ரஸ்ய வெளிநாட்டு அமைச்சகமும், ஈரான் வெளிநாட்டு அமைச்சகமும் மீண்டும் ஒரு தடவை அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுகின்றன.
தாக்குதல் மட்டும் நடந்தால் அந்தப் பிராந்தியமே சுடுகாடாகும், அது சிரியாவை மட்டுமல்ல சுற்றியுள்ள மத்தியகிழக்கு நாடுகளையும், வடக்கு ஆபரிக்க நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளன.
பாரதூரமான விளைவுகள் ஏற்படும் தாக்குதல் நடாத்தக்கூடாது என்று ஈரான் சற்று முன்னர் மீண்டும் அவசர எச்சரிக்கை விடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக