வட மாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறும்
பட்சத்தில் நாடு பிளவுபடுவது உறுதி . விக்னேஸ்வரன் குறிப்பிட்டதைப்போல்
தனித்தமிழ் ஈழம்
உருவாக்கப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார் .
இன்று நாட்டில் சக்திமிக்கதொரு ஆட்சி நடாத்தப்படுகின்றது .
இவ்வாட்சியினை கலைத்து மீண்டும் நாட்டில் யுத்தம் உருவாக்கவே எதிர்
கட்சிகளும் கூட்டமைப்பும் செயற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார் .
பத்தரமுல்லையில் தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த
செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார் .
இதுதொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் வடக்கில்
நடக்கும் தேர்தல் நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமானது . இதில் தமிழ்
தேசியக் கூட்டமைப்பினர் வெற்றி பெற்றால் இலங்கையில் மீண்டும் பிரிவினை வாதமும் யுத்த சூழலும் ஏற்படும் .
எமது நாட்டில் பிரிவினைவாதம் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பதை
புதிதாகக் கூறவேண்டிய அவசியம் இல்லை . கடந்த 30 வருடகாலமாக நாம் அனுபவித்து
வந்துள்ளோம் . எனவே வடக்கு மக்கள் தமது நலன்களை கருத்திற் கொள்ள வேண்டும் .
சர்வதேச பிரிவினைவாத சக்திகளுடன் இணைந்து நாட்டில் பிரிவினைவாதத்தை
ஏற்படுத்தி நாட்டில் அமைதியை சீர்குலைக்கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு
முயலுகின்றது என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் .
நாட்டின் அமைதிக்காக இராணுவ வீரர்கள் தமது உயிர் தியாகங்களை செய்து
இழப்புக்களை சந்தித்து பெற்றுக்கொண்ட சுதந்திர இலங்கையில் மீண்டும்
புலிக்கொடி பறக்கவிடுவதை நாம் விரும்பவில்லை . இதை சர்வதேச சக்திகளும்
புரிந்து கொள்ள வேண்டும் .
இன்று நாடு சக்தி மிக்கதொரு அபிவிருத்திப் பாதையில் சென்று
கொண்டிருக்கின்றது . அதை முடக்கி நாட்டினதும் மக்களினதும் வளர்ச்சியை தடைச்
செய்ய மக்கள் இடமளிக்கக் கூடாது எனவே வடமேல் மற்றும் மத்திய
பாதுகாப்புசபைத் தேர்தல்களில் எமது ஆட்சியிணை நிலைநாட்டி மீண்டும் நாட்டின்
சுயாதீனமானதொரு ஆட்சியினை உருவாக்க வேண்டும் . வடக்கில் உருவாகவிருக்கும்
பிரிவினை வாத ஆட்சியினையும் கட்டுப்படுத்த மக்கள் சிந்தித்து செயற்பட
வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக