சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

30 ஆகஸ்ட், 2013

த.தே.கூட்டமைப்பு வேட்பாளர் பொ . ஐங்கரநேசன் வீட்டின் மீது கழிவு எண்ணெய் வீச்சு



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளரும் , சூழலியலாளருமான பொ . ஐங்கரநேசன் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களினால் , கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது .
 
அத்துடன் , வீட்டின் முன்பாக பூசணிக்காய் வெட்டி வைக்கப்பட்டுள்ளது . இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
 
இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 நபர்கள் இவ்வாறான சம்பவத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் , அதே சமயம் வீட்டு வளவிற்குள் இருந்த கிருஸ்ணர் ஆலயத்தின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலைக்கும் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளதாக ஐங்கரநேசன் இன்று வெள்ளிக்கிழமை கூறினார் .
 
இந்நிலையில் , சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக