இலங்கையின் வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு
நடைபெற்றத் தேர்தல்களில், வேட்பாளர்கள் பெற்றுள்ள விருப்ப வாக்கு விபரங்கள்
வெளியாகத் தொடங்கியுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், தமிழரசுக் கட்சியின்
சார்பில் முதலமைச்சர் வேட்பாளாரக நிறுத்தப்பட்ட முன்னாள் நீதிபதி சி வி
விக்னேஸ்வரன் 1,32,255 வாக்குகள் பெற்று வருப்ப வாக்கு பட்டியலின்
முதலிடத்திலுள்ளார்.
இரண்டாவதாக அனந்தி சசிதரன்
பெற்றுள்ளார். அவர் பெற்ற விருப்ப வாக்குகள் 87,870. புளாட் அமைப்பின்
தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் 39,715 வாக்குகள் பெற்று மூன்றாவது
இடத்தில் வந்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம் கே சிவாஜிலிங்கம் 22,660 வாக்குகளைப் பெற்று ஏழாவது இடத்தை பெற்றுள்ளார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா
மாவட்டங்களில் வேட்பாளர்கள் பெற்றுள்ள விருப்ப வாக்குத் தகவல்கள் முழுமையாக
வெளியாகியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப்
பெற்றுள்ள தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களான பசுபதி அரியரத்தினம் -27264
வாக்குகளும் தம்பிராசா குருகுலராசா- 26427 வாக்குகளும் சுப்பிரமணியம்
பசுபதிப்பிள்ளை- 26132 வாக்குகளும் பெற்று முதல் மூன்று இடங்களை
பிடித்துள்ளனர்.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்
கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்ட வீரசிங்கம் ஆனந்த சங்கரி அவர்களால்
2896 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்
கட்சியின் சார்பில் போட்டியிட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளவர்களின்
விபரங்கள்: அன்ரனி ஜெகிநாதன்- 9,309 வாக்குகள், சிவப்பிரகாசம் சிவயோகன்-
9,296 வாக்குகள், துரைராஜா ரவிகரன்- 8,868 வாக்குகள்
வவுனியா மாவட்டத்தை பொருத்தவரையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளவர்களின் விபரங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட
வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் 19,656 வாக்குகளையும், கந்தர் தாமோதரம்
லிங்கநாதன்- 11,901 வாக்குகளையும், ம. தியாகராசா- 11,681 வாக்குகளையும்,
ஐ.இந்திரராசா- 11,535 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் வேட்பாளர்கள் பெற்ற விருப்ப வாக்குகள் குறித்த விபரங்கள் வந்து கொண்டிருக்கின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக