ஏமனில் 40 வயது நபரை மணந்த 8 வயது சிறுமி முதல் இரவில் ரத்தப்போக்கு
ஏற்பட்டு பரிதாபமாக பலியானார்.
வடமேற்கு ஏமனில் உள்ள ஹஜ்ஜா மகாணத்தில்
இருக்கும் மீடி நகரில் 40 வயது நபர் ஒருவர் 8
வயது சிறுமி ஒருவரை கடந்த வாரம் திருமணம் செய்தார். முதல் இரவில் அந்த நபர்
சிறுமியுடன் உறவு கொண்டுள்ளார். அதன் பிறகு சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு
ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர்
இழந்தார். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் குடும்பத்தார் மற்றும்
கணவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஏமனில் வசிக்கும் பல ஏழைக் குடும்பங்கள் தங்கள் பெண் பிள்ளைகளை வளர்க்கும்
செலவை மிச்சப்பட்டுத்த அவர்களை சிறு வயதிலேயே திருமணம் செய்து
கொடுத்துவிடுகின்றனர். ஏமனில் உள்ள 24 மில்லியன் மக்களில் 10.5 மில்லியன்
பேர் போதிய உணவின்றி இருப்பதாகவும், 13 மில்லியன் பேர் பாதுகாப்பான
குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதாகவும் கடந்த ஜனவரி மாதம்
வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக