தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல்பரப்புரைக் கூட்டம் கிளிநொச்சி தர்மபுரப் பகுதியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் செ.புஸ்பராசா தலைமையில் நேற்று மாலை 4மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணியளவில் நிறைவு பெற்றது. இப் பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சி.சிறீதரன், வடமாகாண சபைத் தேர்தலில்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்போட்டியிடும் வேட்பாளர்கள்ப.அரியரத்தினம், த.குருகுலராசா,சு.பசுபதிப்பிள்ளை கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் நாவை குகராசா, கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள், சு.தயாபரன், மா.சுகந்தன்,சி.தவபாலன், வி.சுவிஸ்கரன், சி.சுப்பையா பளைப் பிரதேச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைப்பாளர் சாந்தன், ,கட்சி செயற்பாட்டாளர்கள் தி.சிவமாறன், மா.ஜெகன், கண்டாவளை வர்த்தக சங்கத்தலைவரும் முதியோர் சங்கத் தலைவருமான ஸ்ரீதரன், பொதுமக்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தேனிசைச் செல்லப்பா அவர்களினால் பாடப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான தேர்தல் பாடல்கள் இறுவெட்டு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களால் வெளியிடப்பட, அவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இன்நிகழ்வில் தேனிசைச் செல்லப்பா குழுவினர்களினால் பாடப்பட்ட 3 பாடல்கள் அதில் ஒன்று இங்கே உங்களுக்காக இன்நிகழ்வில் தழிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுச்சி கீதம் வெளியிடப்பட்டது.
இளையகம்பனின் பாடல் வரிகட்கு தேனிசைச் செல்லப்பா இசை, பாடல்களை வழங்கியிருந்த ஒருபாடல் வெளியிடப்பட்டதுடன் ஏனைய இருபாடல்களும் தொடர்சிசியாக வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத் தக்கது. இப்பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், சி.சிறீதரன் வடமாகாணசபைக்கான தேர்தல் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம்,த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் நாவை ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக