சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

8 செப்டம்பர், 2013

யாழ்.குடாநாட்டில் இதுவரை 55 வீதமான வாக்காளர் அட்டைகள் உரியவர்களுக்கு விநியோகம்.


யாழ்.குடாநாட்டில் இதுவரை 55 வீதமான வாக்காளர் அட்டைகள் உரியவர்களுக்கு விநியோ கிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிரதம தபாலக அதிகாரி தெரிவித்தார்.  யாழ்.தேர்தல் அலுவலகத்தில் இருந்து 4 லட்சத்து 26 ஆயிரத்து 703 வாக்காளர் அட்டைகள் உரியவர்களுக்கு விநியோகிப்பதற்காக யாழ்.பிரதம தபாலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் தபாலகத்தால் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார் அந்த அதிகாரி.   55 வீதமான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இந்த வாக்காளர் அட்டை விநியோகம் இடம்பெறும். தொடர்ந்து இவற்றை அந்தந்தத் தபாலகங்களில் வைத்து உரியவர்கள் தகுந்த ஆதாரம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக