சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

1 செப்டம்பர், 2013

மேர்வின் சில்வாவின் அனாகரிக செயல் - இலங்கை அரசு மன்னிப்பு கோரல்!


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வா அனாகரியமான முறையில் வெளியிட்ட கருத்து தொடர்பாக கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார் நவநீதம்பிள்ளை.

நவனீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அண்மையில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார். இந்த கருத்து அடங்கிய வீடியோ காட்சி அண்மையில், நவநீதம்பிள்ளைக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிட்ட நவனீதம்பிள்ளை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இந்த கருத்து தொடர்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நவனீதம்பிள்ளையிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ஹில்டன் ஹோட்டலில் வைத்து நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு மன்னிப்பு கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டுக்கு விஜயம் செய்துள்ள உயர் ஐக்கிய நாடுகள் அதிகாரிக்கு எதிராக இவ்வாறு அமைச்சர் ஒருவரை கருத்து வெளியிட அனுமதித்தமை கண்டிக்கப்பட வேண்டியது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக