பிரான்ஸ் பாரிஸ் லாசபல் மாணிக்க விநாயகர் ஆலய 18வது தேர்த் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.
01.09.2013 இன்று காலை 9.00 மணிக்கு ஆலயத்திலிருந்து பெரும் பக்தர்கள் புடைசூழ நாதஸ்வர மேள இசை முழங்க எம் பெருமான் மாணிக்க விநாயகர் தேர்பவனி ஆரம்பமாகியது . தீச்சட்டி ,காவடி முன் வர இன மத மொழி வேறுபாடின்றி பக்தர்கள் கலந்து கொண்டனர். லாசபல் பகுதி வர்த்தகர்கள் கும்பம் வைத்து எம் குறை தீர்க்க வந்த மாணிக்க விநாயகரை வரவேற்றனர்.
லாசபல் பகுதி எங்கும் பக்தி பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது. பக்த்தர்களுக்கு தாக சாந்தியும், அன்ணதான உணவுப் வழங்கப்பட்டது. 14.30 மணிக்கு தேர்த் திருவிழா இனிதே நிறைவு பெற்றது.
செய்தி நிருபர் -யூடி புகைப்படம்- யூடி ,யாழ்தீபன் வீடியோ- கபில்ராஜ்

















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக