சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

10 செப்டம்பர், 2013

வாக்குரிமையில் இல்லாத விக்கினேஸ்வரனை முதலமைச்சராக்கி என்ன சாதிக்கப் போகின்றீர்கள்?


கடந்த காலத்தில் இடம் பெற்ற ஊள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது அரசின் உதவி இன்றி வடக்கு அபிவிருத்தி செய்ய முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடத்தே பிரச்சாரம் செய்து அமோக வெற்றி ஈட்டினார்கள் .
ஆனால் அவர்களினால் அரசினால் வழங்கப்பட்ட பணத்தில் இருந்து செய்ய வேண்டிய வேலைகளைக்கூட அவர்களால் செய்யமுடியாத நிலையே காணப்படுகின்றார்கள் . இந்நிலையில் வடக்கில் மாகாண சபையைக் கைப்பற்றி இவர்களால் எதனைச் சாதிக்க முடியும் எனத் தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஜா , வடக்கில் வாக்குரிமையில் இல்லாத விக்கினேஸ்வரனை முதலமைச்சராக்கி என்னத்தைச் சாதிக்கப் போகின்றீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார் .
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியில் ஊடகவிலாளர்கள் மாநாட்டை நடத்தினார் .
இம்மாநாட்டில் , கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் 500 மில்லியன் ரூபா செலவில் சாவகச்சேரி நகர சபைக்கான கட்டிடத் தொகுதியை ஆரம்பித்து வைத்தேன் .
குறிப்பிட்ட கட்டிடப் பணிகள் முடிவடைந்துள்ள போதிலும் அதனை திறந்து வைக்கக் கூடிய நிலையில் சாவகச்சேரி பிரதேச சபை காணப்படவில்லை .
இதே போன்று சாவகச்சேரியில் உள்ள மின்சந்தையொன்றும் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது .நான் அதனைப் பார்வையிட்ட பின்னர் அதனைத் திருத்தும் வகையில் நிதியை வழங்கினேன் . அதுவும் கூட இன்று வரைக்கும் திருத்தப்படாத நிலையிலேயே காணப்படுகின்றது .
இத்தகைய நிலையில் முரன்பாடுகளுடன் காணப்படுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பால் மாகாண சபை மட்டத்தில் எதனையும் சாதிக்க முடியாது என்பதே உண்மையாகும் .கடந்த பல வருடங்களாக யுத்ததினால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் இந் நாட்டில் வாழும் ஏனைய மக்களைப் போன்று இன்று அனைத்து சுதந்திரத்தையும் அனுபவித்து வருகின்றார்கள் .
கடந்த காலத்தை நினைவு படுத்திப்பார்க்க வேண்டியது அவசியமாகும் .இவைகளை கருத்தில்கொண்டு நடக்கப் போகும் வட மாகாண சபைத் தேர்தலில் தகுதியான பிரதிநிதிகளைத் தெரிவுசெய்ய வேண்டியது தமிழ் மக்களுடைய கடமையும் பொறுப்பும் ஆகும் எனவும் குறிப்பிட்டார்
 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக