இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில்
கலந்துகொள்ளப்போவதாக அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டொனி அபொட்
தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற தொலைபேசி
உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது புதிய பிரதமரை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்தியுள்ளார். கடைசி பொதுநலவாய தலைவர்களின்
மாநாடு கடந்த 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெற்றது.
இந்நிலையில் இது தொடர்பில் இலங்கைக்கு உதவிசெய்யும் பொருட்டு கடைசி
மாநாட்டின் ஏற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் ஜூன் மாதம்
இங்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக