சிந்தனைத்துளிகள்....

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால்
இலச்சியவாதிகளான நாம்
சரியாக இருக்கிறோம் என்பதற்கான
அடையாளம் அது !

“ஜென்னி மார்க்ஸ்”

22 செப்டம்பர், 2013

மக்கள் பெரும் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்' - விக்னேஸ்வரன்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது


வட மாகாண மக்கள் தம்மிடம் பெரும் பொறுப்பை கையளித்துள்ளதாக வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரான சி.வி. விக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து,  அவர், இந்த அமோக வெற்றி தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளதாகவும், அதேவேளை மக்கள் தம்வசம் பாரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.
இந்த மாகாண சபைத் தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா சம்பந்தன் அவர்கள், மக்கள் சமாதானத்துக்காக வாக்களித்துள்ளார்கள் என்றும், அவர்கள் தமது எண்ணங்களை வாக்குகளில் பிரதிபலித்துள்ளார்கள் என்றும், அவர்களது தீர்ப்புக்கு ஏற்ப தாம் நடப்போம் என்றும் கூறினார்.

போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது . மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களை அது பெறுகிறது
அனைத்து மாவட்டங்களிலும் அந்தக் கட்சியே முன்னணி பெற்று , வெற்றி பெற்றது .
மன்னார் மாவட்டத்தில் 3 இடங்களையும் , கிளிநொச்சியில் 3 இடங்களையும் , முல்லைத்தீவில் 4 இடங்களையும் , வவுனியாவில் 4 இடங்களையும் , யாழ் மாவட்டத்தில் 14 இடங்களையும் ( மொத்தமாக 28 இடங்கள் ) அந்தக் கட்சி பெற்றுள்ளது .
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7 இடங்களை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது .
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் ஒரு இடத்தை வென்றிருக்கிறது .
ஆகவே போனஸாக இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும் .
ஆகவே மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 30 இடங்களும் , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 7 இடங்களும் , சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 1 இடமும் கிடைத்துள்ளன .
ஆகவே வட மாகாண சபைக்கான ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுகிறது .
யாழ்ப்பாணம் :
தமிழ் அரசுக் கட்சி --- 14 இடங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 2 இடங்கள்
மன்னார் :
தமிழ் அரசுக் கட்சி --- 3
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 1
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் --- 1
கிளிநொச்சி :
தமிழ் அரசுக் கட்சி --- 3
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 1
 
முல்லைத்தீவு :
தமிழ் அரசுக் கட்சி --- 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --- 1
வவுனியா :
தமிழ் அரசுக் கட்சி - 4
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக