யாழ் . பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் ஆயுதம் தரித்த குழுவொன்று புகுந்து அங்கிருந்த
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமையால் அங்கு பதற்றம் நிலவுவதாக தெரியவருகின்றது .
வடமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றதையடுத்து யாழ் .
பல்கலைக்கழகத்தில் பட்டாசு வெடிச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக
அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன .
இதன் எதிரொலியாகவே ஆயுதம் தரித்த குழுவொன்று பல்கலைக்கழக ஆண்கள்
விடுதிக்குள் பலவந்தமாக புகுந்து அங்கு தங்கியிருந்த மாணவர்கள் மீது
கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது .
இதன் காரணமாக யாழ் . பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
மேலும் யாழ் நிலைமைகளை அவதானிக்கும் பொழுது காலைப்பொழுதில் ஊரடங்கு
அமுல்படுத்தப்படும் என எண்ணத் தோன்றுவதாக கபே அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக